போட்டி விதி முறைகள் :
1. போட்டி ((6.45 - 7.00am )to (8.30-8.45 am )ஆரம்பித்து முடிப்பது அனைவருக்கும் நல்லது..
2.அனைத்து அணியினரும் stumps கொண்டு வரவும்..இது போட்டி தாமதம் ஆவதை தடுக்கும்..
3.நடுவர்கள் வரவில்லை என்றால் அல்லது தாமதம் ஆனால் பேட்டிங் அணியினர் நின்று சரியாக செயல்படவும்... இதுவும் போட்டி தாமதம் ஆவதை தடுக்கும்.
4. அன்றையப் போட்டிக்கு நடுவர்கள் வரவில்லை என்றால் அந்த அணியினருக்கு அடுத்த போட்டி ரத்து செய்யபட்டு எதிரணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்..
7 மணிக்குள் நடுவர்கள் வரவில்லை என்றாலும் இதே விதி முறையே....
ஏதாவது திடீர் காரணம் இருந்தால் அன்றைய போட்டி முன்னரே அறிவிப்பது நல்லது.
5.போட்டி நடுவே வரும் குழப்பங்கள், சர்ச்சைகள், இரு அணி தலைவர்கள் மற்றும் நடுவர்கள் மட்டுமே பேச வேண்டும்... அணி வீரர்கள் அவரவர் அணி தலைவரிடம் மட்டுமே பேச வேண்டும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது..
அணியில் நடுவர் பணியை நன்கு தெரிந்தவரை நடுவர் பணிக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம். அது அணித்தலைவரின் கடமை.
6. பந்து வீசும் முறை கேடு(Action Throw) , பேட்ஸ்மேன் முறையீட்டால் நடுவரின் உதவியுடன் சரியான தீர்ப்பு வழங்கப்படும்...
முறையான பந்து வீச்சாளர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள்.. அது அணித்தலைவரின் பொறுப்பு..
7. முதல் நான்கு ஓவர்கள் முடிவதற்குள் புது பந்து(new ball ) உடைந்தாலோ, தொலைந்தாலோ மட்டுமே பழைய பந்து (semi ball ) அனுமதிக்க படும்.
8. ஓவர்க்கு 1 பவுன்சர் அனுமதிக்கப்படும். இரண்டவது பவுன்சர் வீசினால் பந்தை அடித்தாலும் நோ பால் அறிவிக்கப்படும்.
9.புள்ளி பட்டியலில் 5,6,7 இடங்களில் இருக்கும் அணிகள் அரை இறுதி மட்டும் இறுதி போட்டிக்கு நடுவராக நிற்க வேண்டும்.
5 வது இடம் - முதல் அரை இறுதி
6 வது இடம் - இரண்டாவது அரை இறுதி
7 வது இடம் - இறுதி போட்டி
10.Vicky மற்றும் Noodens பந்து மட்டும் அனுமதிக்கப்படும்