Entry :
700rs new Vicky ball (All matches) or 70rs for ball
விதிமுறைகள் :
1. நடுவர் தீர்ப்பே இறுதியானது. நடுவரிடம் முறையிட அணி தலைவருக்கு மட்டுமே உரிமை உண்டு.
2. மைதானத்தின் உள்ளே உள்ள மரங்கள் தட்டி கேட்ச் பிடித்தால் அது அவுட் வழங்கப்படும். அதுவே வெளியில் உள்ள மரங்கள் தட்டினால் பௌண்டரி வழங்கப்படும்.
3. Wide மற்றும் NoBall மட்டுமே உதிரிகளாக கருதப்படும். இதர உதிரிகள் வழங்கப்படாது. (wide வரிக்கு மேல் பந்து கடக்கும் பட்சத்தில் wide அறிவிக்கபடும். Bowling கோட்டை தாண்டி கால் வைக்கும் பட்சத்தில் No ball வழங்கப்படும்)
4. அனைத்து NoBall உதிரிக்கும் Freehit வழங்கப்படும்.
5. 2023 ஆண்டு முதல் குமரி தென்றல் மைதானத்தில், ஒரு நபர் மூன்று அணிகளுக்கு மட்டுமே விளையாட அனுமதிக்கப்படும். அதற்கு மேல் அந்த நபர் எந்த அணிகளுக்கும் விளையாட அனுமதிக்க படமாட்டார்.
6. பௌலர் ஒவ்வொரு முறை பௌலிங் செய்ய வரும்போதும் எந்த சைடு பௌலிங் செய்கிறார் என்பதை அம்பேரிடம் சொல்ல வேண்டும்.
7. சொட்டு பௌலிங் அனுமதி இல்லை. பைபர் பேட் அனுமதி இல்லை.
8. பௌலர் Runup துவங்கிய பின்பு பந்தை எறிந்து முடிக்கும் வரை பீலடிங் அணியினர் அமைதியாக இருக்க வேண்டும் .அல்லது பேட்ஸ்மேனை இடஞ்சல் செய்ததாக கருதி நோபல் வழங்கப்படும் (Look - 4)
9. பேட்ஸ்மேன் பின்பக்கம் 1run மற்றும் 2run டிகிளர். 1run டிகிளர் ஸ்ட்ரைக் எந்த பேட்ஸ்மேன் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.
10. போட்டிக்கு 15 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 11 4 மாற்று வீரர்கள். (ஆள்மாறாட்டம் ஏதேனும் செய்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவீர்)
11. போட்டிக்கு அணிகள் குறிப்பிட்ட நேரத்திற்க்கு 20 நிமிடம் முன்னரே வந்து அணி வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அணிகள் தகுந்த நேரத்தில் வர தவறினால் எதிரணிக்கு போனஸ் ரன் வழங்கி overs குறைக்கப்படும். (முதல் 5 நிமிடம் தாமதத்திற்கு, 1 ஓவர் குறைத்து 6 போனஸ் runs எதிரணிக்கு வழங்கப்படும். அடுத்த ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் 1 ஓவர் குறைத்து 6 போனஸ் runs வழங்கப்படும். 20 நிமிடம் வரை அணி வர தவறினால் Scratch செய்யப்படுவீர்கள்)
12. விதிமுறைகள் பின்பற்ற தவறும் அணிகளை எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் செய்ய நடத்துனருக்கு உரிமை உண்டு.
13. குறைந்தது 5 பௌலர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு பௌலர் அதிகபட்சம் 4overs வீச அனுமதிக்கப்படுவீர்.
14. கேட்ச் முறையில் அவுட் ஆகும் பேட்ஸ்மேன்க்கு, புது பேட்ஸ்மேன் strike செய்யும்படி அழைக்கப்படுவார்.
15. முறையான விளையாட்டு உடைகள் அணிந்து விளையாட அனுமதிக்கப்படுவீர். லுங்கி அணிந்து விளையாட அனுமதி இல்லை.
16. மது அருந்திவிட்டு விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
17. என்ட்ரி தொகை முழுவதும் செலுத்திய பிறகே அணிகள் முதல் போட்டியை விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
18. தவறான வார்த்தைகள் மைதானத்தில் பயன்படுத்த கூடாது. தங்கள் அணிகளுக்கு நடுவில் உரையாடும் போதும் இதை கடைபிடிக்க வேண்டும். தவறினால் அணி தகுதி நீக்கம் செய்யப்படும்.