குறும்பலாப்பேரி
KMC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும்
24-ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி
நாள் : 03.07.2022 முதல் 25.09.2022 ( ஞாயிறு மட்டும் ).
இடம்: குறும்பலாப்பேரி ( பட்டிபத்து குளம் கைபொத்தை மலை வடபுறம் ).
முதலாவது பரிசு ரூ.15001 வெற்றிக்கோப்பை,
இரண்டாவது பரிசு ரூ.12001 வெற்றிக்கோப்பை,
மூன்றாவது பரிசு ரூ.9001 வெற்றிக்கோப்பை,
நான்காவது பரிசு ரூ.4001 வெற்றிக்கோப்பை,
ஐந்தாவது பரிசு ரூ.4001 வெற்றிக்கோப்பை
ஆறு முதல் ஒன்பதாவது பரிசு ரூ.2000 வெற்றிக்கோப்பை
விதிமுறைகள் :
✔️முதலில் பதிவு செய்யும் 32 அணிகள் மட்டுமே.
✔️நுழைவு கட்டணம் ரூ.1200 மட்டும்.
✔️2 போட்டியில் வெற்றி பெறும் அணி பரிசுக்கு தகுதிபெறும்.
✔️அனைத்து ஆட்டமும் 16 ஓவர் கொண்டது.
✔️அனைத்து ஆட்டத்திற்கும் பந்து வழங்கப்படும்.
✔️அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்படும்.
✔️அனைத்து அணியினரும் ஆட்ட நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும்.
நேரம் தவறும் பட்சத்தில் விளையாட்டு குழுவினர் எடுக்கும் முடிவிற்கு கட்டு பட வேண்டும்.
✔️அனைத்து வீரர்களும் கண்டிப்பாக டிரக் சூட். டி-சர்ட் அணிந்து விளையாட வேண்டும். கைலி கட்டி விளையாட அனுமதி இல்லை.
✔️ஒவ்வொறு சுற்றும் முடிந்த பின்னர் அடுத்த சுற்று தகவல் தெரிவிக்கப்படும்.
✔️துரோ பந்து வீச்சாளர்கள் பந்து வீச அனுமதி இல்லை. நடுவர் பந்து வீச முடியாது என அறிவித்தால் கண்டிப்பாக வீச முடியாது. அதற்காக பிரச்சனை பண்ண கூடாது.
✔️ஏதேனும் பிரச்சனை பண்ணும் வீரர்கள் (அணியினர்) ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.
✔️16 ஓவரில் மொத்தம் 6 ஓவர்கள் பவர் பிளே. இதில் முதல் 4 ஓவர்கள் கட்டாய பவர் பிளே அதில் 2 வீரர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டும்.
2 ஓவர்கள் மட்டை வீச்சு பவர் பிளே. இதனை கடைசி 4 ஓவர்களுக்கு முன்னதாக பயன்படுத்த வேண்டும். இதில் 3 வீரர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டும்.
பவர் பிளே அல்லாத ஓவர்களில் 5 வீரர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டும்.
✔️போட்டி ஆரம்பிற்பதற்கு முன்னதாக ஆடும் 11 வீரர்கள் பெயர் தெரியப்படுத்த வேண்டும். 1 வீரர் மட்டுமே மாற்று வீரராக பயன்படுத்த வேண்டும். மாற்று வீரர் பில்டிங் மட்டுமே செய்ய முடியும்.
✔️மட்டை வீச்சாளருக்கு பதில் ரன்னர் கிடையாது.
✔️ஒரு விக்கெட் காப்பாளர் மட்டுமே பந்து வீச அனுமதி உண்டு.
✔️ஒரு அணியில் ஆடிய வீரர் மற்றொரு அணியில் ஆட அனுமதி இல்லை.
✔️விளையாட்டை மாற்றி அமைக்க விளையாட்டு குழுவிற்கு முழு உரிமை உண்டு.
முன்பதிவிற்கு அணுகவும் : 9500919847
9500002579
8072804749
KMC ஸ்போர்ட்ஸ் கிளப்
குறும்பலாப்பேரி