Organiser's Detail
Tournament's Detail
DATES
23-Feb-22 to 31-Mar-22
LOCATIONS
Madurai - Vaagaikulam
Other Details
*Al Ameen FPL - 6 Tournament Rules..*
1. ஒரு அணிக்கு 15 பேர் கொண்ட பெயர் பட்டியல் Tournament துவங்கும் முன்னரே கமிட்டியாளர்களுக்கு
அனுப்பவேண்டும்..
2. போட்டிக்கான 11 s வீரர்களை 15 பேர் கொண்ட பட்டியலில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்
3. போட்டி நடத்தப்படும் பொழுது 11 s இல்லை என்றால் இருக்கும் நபர்களை வைத்து மட்டுமே விளையாட வேண்டும் வேறு நபர்களை வைத்து விளையாட அனுமதி கிடையாது..
4. போட்டிகள் அனைத்தும் வாகைகுளம் மைதானத்தில் மட்டுமே வைத்து நடத்தப்படும்.
வாகைகுளம் மைதானத்தில் நடத்தும் சூழல் இல்லை என்றால் கேப்டன்கள் ஒப்புதலுடன் போக்குவரத்து நகரில் நடத்தப்படும்
5. போட்டிகள் அனைத்தும் அட்டவணைப்படி நடத்தப்படும் போட்டிகள் மாற்றியமைக்கும் உரிமை கமிட்டிக்கு மட்டுமே உண்டு
6. ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்களை கமிட்டியாளர்கள் அறிவிப்பார்கள் , நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
7. போட்டியில் விளையாட கூடிய வீரர்கள் அனைவருமே வேலை பார்ப்பவர்களாக தொழில் செய்யக்கூடியவர்களாக இருப்பதால் சரியான நேரத்தில் ஆரம்பித்து முடித்தால் மட்டுமே அனைவருக்கும் இலகுவாக இருக்கும் ஆக குறிப்பிட்ட நேரத்தில் போட்டியை ஆரம்பிக்கப்பட வேண்டும் ஒருவேளை போட்டி தாமதமானால் அதற்கேற்ப ஓவர்கள் குறைக்கப்படும்..
8. பவுலர் பவுலிங் செய்யப்படும் பொழுது பில்டிங் இருக்கும் அணி பேசக்கூடாது பேசினால் அந்த பால் No பாலாக அறிவிக்கப்படும்..
9. ஒரு Sportsman க்கு அழகு நேர்மையாக விளையாடுவது..
அனைவரும் நேர்மையாக விளையாடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..
10. அன்பான வேண்டுகோள் போட்டியாளர்கள் அனைவரும் Shoe போட்டுக்கொள்வது நல்லது அவர்களின் பாதுகாப்பிற்காக...
11. ஒவ்வொரு மேட்சின் போதும் அந்த போட்டிக்கு தேவையான உபகரணங்களை அன்று ஆடக்கூடிய இரு அணிகளுமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவது ஒரு அணியாகவும் ஆட்டம் முடிந்த பிறகு எடுத்து வைப்பது மற்றொரு அணியாகவும் இருப்பது நல்லது..
12. பவுலர் பந்து வீச ஆரம்பிக்கும் போது Stick சொல்லிவிட்டு தான் விச ஆரம்பிக்க வேண்டும்.. இல்லாவிடில் அது No பாலாக அறிவிக்கப்படும்..
13. மேட்ஸ்மேன்களுக்கு தலைக்கு மேல் வந்தால் முதலில் First Bounce ஆக அறிவிப்பு செய்யப்படும் இரண்டாவது முறையாக வந்தால் No ball ஆக அறிவிக்கப்படும் ..
14. ஒரு பவுலர் 3 ஓவர் மட்டுமே வீச அனுமதி அளிக்கப்படும்..
15. போட்டியில் 5 ஓவர்கள் கொண்ட பவர் பிளே உண்டு..
16. அனைத்து விதமான No பால்களுக்கும் Free-Hit உண்டு...
17. Man-Kad விதிமுறை உண்டு அதில் விக்கெட் விழுந்தால் அவுட் என்று அறிவிக்கப்படும் warning கிடையாது..
18. பந்துவீச பட்ட பிறகு கீப்பர் கையிலோ அல்லது பவுலர் கையிலோ வந்து வந்த பிறகு பால் Dead ஆகும்.. அதற்கு முன்னர் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறக்கூடாது umpire இடம் Inform செய்து விட்டு வெளியேறலாம்.இல்லாவிடில் ரன் அவுட் செய்தால் அவுட் என்று அறிவிக்கப்படும்
19. அம்பயர் ஓவர் என்று சொன்ன பிறகுதான் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேற வேண்டும் அதற்கு முன்னர் அவுட் செய்தால் அவுட் ஆகவே அறிவிக்கப்படும்..
20. புள்ளிகள் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் தரவரிசை பட்டியலிடப்படும்..
21. பேட்ஸ்மேனுக்கு ரன்னர் வைக்க வேண்டுமென்றால் அந்த பேட்ஸ்மேன் தனிப்பட்ட முறையில் குறைந்தது 15 பந்துகள் ஆடியிருக்கவேண்டும்
அதற்க்கு குறைவாக இருக்கும் நிலையில் நடக்கும் மேட்ச்சில் அடிபட்டு ஓட முடியாத சூழ்நிலை இருந்தால் கமிட்டியாளர் மற்றும் நடுவரின் ஒப்புதல் பெற்ற பின்பு தான் ரன்னர் வைக்க வேண்டும்..
22. மேட்ச் நடக்கும் போது Scorer அருகில் ஒரு கமிட்டியாளர் மட்டும் தான் அமர வேண்டும் பேட்டிங் அணியில் இருந்து யாரும் அமரக்கூடாது ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதை கேட்டுவிட்டு சென்றுவிட வேண்டும்..
23. 11s ல் உள்ளவர் நடக்கும் மேட்ச்சில் குறைந்தபட்சம் 10 ஓவராவது கண்டிப்பாக பீல்டிங் செய்திருக்க வேண்டும் செய்ய வேண்டும் , அதற்க்கு குறைவாக விளையாடி Substitute வைக்க கூடாது...
24. ஒரு அணிக்கு 15 பேர் வரை சேர்த்துக்கொள்ளலாம்..
25.ஒரு அணிக்கு நுழைவுக் கட்டணமாக ₹.1400 நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படும்.. 15 நபர் கொண்ட அணிக்கு ₹.1500
26. எல்லா அணிகளும் மேட்சுக்கு தேவையான பேட் போன்ற உபகரணங்கள் சொந்த பொருட்களை கொண்டுவர வேண்டும் இல்லையென்றால் கமிட்டியிடம் முன்னரே தெரிவித்து அவர்களிடத்தில் நீங்களே பெற்றுக்கொண்டு விளையாடிவிட்டு பொருட்களுக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் மறுபடியும் அதை ஒப்படைக்க வேண்டும் ஒருவேளை சேதாரம் ஆகி இருப்பின் அந்த பொருளை புதியதாக அந்த அணி வாங்கித்தர வேண்டும்..
27. மேட்ச் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் நடுவர் இடமோ கமிட்டியாளர்கள் இடத்திலோ அணித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தவிர வேறு யாரும் பேசக்கூடாது தேவையில்லாத வாக்குவாதங்கள் யாரேனும் ஈடுபட்டால் கமிட்டி சார்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
28. முக்கியமான ஒரு விதிமுறை இந்த விதிமுறைகள் அனைத்தையுமே பங்கு வரக்கூடிய அனைத்து வீரர்களும் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்..