::: போட்டி விதி முறைகள் :::
1.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்
2. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ரன் ரேட் முறை உண்டு.
3. டாஸ் போடும்போது பிளே 11 எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். போட்டியின் ஐந்தாவது ஓவர் முன்பாக பிளே 11 கண்டிப்பாக இருக்க வேண்டும்.
4. லீக் ஆட்டங்கள் அனைத்தும் 10 ஓவர் ஆட்டங்கள் ஆகவும், இறுதிப்போட்டி 12 ஓவர் ஆட்டமாகவும் நடைபெறும்.
5. அனைத்துப் போட்டிகளிலும் முதல் மூன்று ஓவர்கள் பவர் பிளே ஆகும். (பேட்டிங் பவர்ப்ளே என்று தனியாக கிடையாது)
6. அனைத்துப் போட்டிகளிலும் குறைந்தபட்சம் ஐந்து பவுலர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் (லீக் போட்டியில் ஒரு பவுலர் அதிகபட்சம் 2 ஓவர்கள் பந்து வீச முடியும் இறுதிப் போட்டியில் இரண்டு பவுலர்கள் மட்டும் அதிகபட்சம் 3 ஓவர்கள் பந்து வீச முடியும்.)
7. பேபி ஓவர் முறை கிடையாது
8. போட்டியின்போது 5 ஓவர் முடிந்தபின் ( இறுதி போட்டி 6 ஓவர்), ட்ரிங்க்ஸ் பிரேக் உண்டு.
9. மாற்று ஓட்டக்காரர் (By runner) விதி முறைகள்:
*காயம் அடைந்த வீரர் எப்போது வேண்டுமானாலும் மாற்று ஓட்டக்காரர் வைத்துக் கொள்ள முடியும்.
*மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்தபட்சம் இரண்டு ஓவர் பேட்டிங் செய்த பின்பு மாற்று ஓட்டக்காரர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
10. பவுலிங் கார்டு கூறும் முறை :
பவுலர் நடுவரிடம் ஓவர் ஆரம்பிக்கும் போது (புதிய ஓவர்/ ஸ்பெல் எதுவானாலும்) மற்றும் பவுலிங் கார்டு மாற்றும் போது மட்டும் கார்டு சொன்னால் போதும். விக்கெட் விழும்போது சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.
11. ஆட்டம் டையில் முடிந்தால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.
12. நடுவரின் முடிவுக்குள் குழப்பம் ஏற்பட்டால் அந்த இரண்டு கள நடுவர்களே பேசி ஒரு பொதுவான முடிவுக்கு வருவார்கள்.
13. நடுவரின் தீர்ப்பு தவறு என நிரூபிக்கப்பட்டால் முடிவு மாற்றம் செய்துகொள்ள முடியும்
* எடுத்துக்காட்டு தவறான பீல்ட்செட் பந்துவீசிய பின்பு நிரூபித்து நோபால் செய்து கொள்ள முடியும்.
14. நடுவரின் முடிவே இறுதியானது.
15. LBW & Leg byes தவிர கிரிக்கெட்டின் அனைத்து பொதுவான விதிமுறைகள் பின்பற்றப்படும்.
16. பிரிஹீட் முறை கிரீஸ் நோபல் மற்றும் இடுப்புக்கு மேல் பந்து வீசினால் மட்டும் ஃப்ரீஹிட் வழங்கப்படும். ஃப்ரீ ஹிட் பீல்டிங் மாற்றம் செய்ய கூடாது.
17. போட்டி குறித்த நேரத்தில் நடைபெறும்.அதிகபட்சமாக 20 நிமிடம் காத்திருப்பு நேரம்... தாமதமாக வரும் அணிக்கு ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு பேட்டிங்கில் இருந்து ஒவ்வொரு ஓவராக குறைக்க படும்.. அரை மணி நேரம் மேல் தாமதமானால் எதிரணி வெற்றியாளர் என அறிவிக்கப்படும்.
18. இதை தவிர வேறு குழப்பங்கள் ,பொதுவான கிரிக்கெட் விதிமுைகளின்படி முடிவு எடுக்கப்படும்.
19.. மழையால் போட்டி தடை பட்டால்,
** போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டால் மழைக்கு பின்பு /மறுநாள் போட்டி அப்படியே தொடரும்.
** போட்டிக்கு முன்பு மழை குறுக்கிட்டால் அதிக பட்சம் 7 ஓவர் வரை குறைக்கப்படும்.
** மழை காரணமாக போட்டி நடத்த முடியாத சூழ்நிலையில் point sharing, இரு அணிகளுக்கும் தலா ஒரு பாயிண்ட் வழங்கப்படும்.
** அதிக மழை இடையூறு ஏற்பட்டால் போட்டி தொடர் திங்கள் கிழமை வரை நீட்டிக்கப்படும்..
** மழை காரணமாக போட்டி மாற்ற முடிவுகள் அனைத்தும் கிளாக்குளத்தின் முடிவே இறுதியாகும்.
20. மங்கண்ட் முறையில் அவுட் செய்யும் முறை உண்டு.. (ஒரு மேட்சுக்கு ஒருமுறை வார்னிங் வழங்கப்படும் அடுத்த முறையிலிருந்து அவுட் அறிவிக்கப்படும்)