*RULES & REGULATIONS*
1. அணித்தலைவர் அனைத்து வீரர்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையோடு விளையாட வழிவகை புரிய வேண்டும்.
2. அவரவர் அணி வீரர்களை போட்டியின் போது ஒழுக்கமாக நடந்து கொள்ள வழி வகுக்க வேண்டும்.
3. காலையில் முதல் போட்டி கட்டாயம் 9.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். அணிக்கு ஒதுக்கப்பட்ட போட்டியின் போது 30 நிமிடங்கள் முன்பாகவே போட்டி நடைபெறும் இடத்திற்கு இரு அணி வீரர்களும் வரவேண்டும். எந்த அணியால் கால தாமதம் ஏற்படுகிறதோ அந்த அணிக்கு தாமதத்திற்கு ஏற்றவாறு ஓவர் குறைக்கப்படும்.
4. ஒரு அணி 2 வீரர்களை மட்டுமே மாற்றி வீரர்களாக களம் இறக்க வேண்டும். அணிப்பட்டியலில் 12 மற்றும் 13 ம் நிலை வீரர்களை மட்டுமே மாற்று வீரர்களாக களம் இறக்க வேண்டும்.
5. போட்டியின் போது காயம்பட்டால் ரன்னர் உபயோகிக்கலாம்.
6. போட்டியின் போது வெளியில் உள்ள வீரர்கள் அவரவர் வீரர்களை ஊக்குவிக்கலாம். மாறாக எதிர் அணியினரை கேலி கிண்டல் மற்றும் விமர்சனம் செய்யக்கூடாது. பந்து வீசும் பொழுது கூச்சலிடக்கூடாது.
7. போட்டி நடைபெறும்பொழுது சர்ச்சை ஏற்படும் நேரத்தில் அணித்தலைவர் மற்றும் துணை அணித்தலைவர் மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும், அணிவீரர்களையோ அல்லது அணி மேற்பார்வையாளர்களையோ வாக்குவாதத்தில் ஈடுபட்டால் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும்.
8. போட்டியின் போது அணிவீரர்கள் தகாத வார்த்தைகளை உபயோகிக்காமல் கட்டுப்பாட்டுடன் அணியை வழிநடத்த வேண்டும்.
9. வீரர்கள் தவறு செய்யும்பட்சத்தில் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
10. வீரர்களை போட்டியில் விளையாட தடை விதிக்கும் அளவுக்கு கமிட்டிக்கு உரிமையுண்டு.
11. மது அருந்திவிட்டு விளையாட அனுமதி இல்லை.
12. ஆட்டத்தின் நேரத்தை மாற்றி அமைக்க உரிமை Commiteeக்கு உண்டு.
13. நடுவர் தீர்ப்பே இறுதியானது.
14. ஒரு அணியில் விளையாடும் நபருக்கு மற்றொரு அணியில் விளையாட அனுமதி இல்லை.
15. கமிட்டிக்கு ஒழுக்கம் அற்ற அணியை DISQUALIFY செய்ய முழு உரிமை உண்டு.
16. ஞாயிறு அன்று *MATCH FIXTURES* வழங்கப்படும்..
17. வீரர்கள் தாண்டவராயபுரத்தில் இருந்து மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
18. எதிரணி வீரர்களை பார்த்து செய்கை காண்பிப்பது பிறகு அவர்கள் சார்ந்த அணியை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது...
19. விளையாட்டு குழு - வின் முடிவே இறுதியானது???