Organiser's Detail
Tournament's Detail
NAME
Abu Premier League (APL) - 2025 (Season - 2)
DATES
11-Jan-25 to 16-Jan-25
LOCATIONS
Pudupattinam - Abu School Ground Puduppattinam
Other Details
அபு பிரீமியர் லீக் 2025 - சீசன் 2 விதிமுறைகள்
1.அனைத்து போட்டிகளுக்கும் 15 ஓவர்கள் நிர்ணயம் செய்யப்படும்.
2. ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.
3. ஆட்டத்திற்கு 15 நிமிடங்கள் முன்பாக டாஸ் போடப்படும்.
4. வீரர்கள் அனைவரும் கட்டாயம் டி ஷர்ட், டிராக் பேண்ட் அணிந்து விளையாட வேண்டும். தவறும் பட்சத்தில் போட்டியில் அனுமதிக்கப்பட மாட்டார் .
5. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. நடுவரிடம் முறையாக அணுக வேண்டும் விவாதம் தவிர்க்கப்பட வேண்டும். சரியோ, தவறோ நடுவரின் தீர்ப்பே இறுதியானது இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
6. சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆட்டத்தின் விதிமுறைகளை மாற்றி அமைக்க போட்டி நடத்துபவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று அன்போடு தெரிவிக்கப்படுகிறது.
7. இன்னிங்ஸ்க்கு தலா 75 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். அதற்குள் அந்த இன்னிங்ஸ் நிறைவடைய வேண்டும் என்பதில் அணித் தலைவர் கவனமுடன் செயல்பட வேண்டும். 75 நிமிடங்களுக்கு மேல் பந்து வீச்சு பணியை மேற்கொள்ளவதை தவிர்க்க வேண்டும் தாமதிக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு ஓவர் குறைக்கப்படும். உதாரணமாக முதலில் ஆடும் அணி 15 ஓவர்களுக்கு 100 ரன்கள் அடித்திருந்தால் இரண்டாவதாக விளையாடும் அணிக்கு பந்து வீச்சில் தாமதித்த ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு ஓவர் குறைக்கப்படும் ஆனால் சேஸ் செய்யும் 100 ரன்கள் குறைக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது.
8. விக்கெட் கீப்பர் பின்புறம் ரன்கள் கிடையாது. ஆனால் விக்கெட் கீப்பர்க்கு பவர் உள்ளது.
9. பந்து மரத்தில் பட்டு பவுண்டரிக்கு வெளியில் சென்றால் மட்டுமே நான்கு மற்றும் ஆறு ரன்களாக கணக்கிடப்படும். மரத்தில் பட்டு உள்ளே வந்தால் ரன்கள் ஓடி எடுக்க வேண்டும். இது சுற்றி உள்ள அனைத்து மரங்களுக்கும் பொருந்தும்.
10. எந்த ஒரு வீரரும் தன் அணி வீரர்களிடமும், எதிரணி வீரர்களிடமும், எந்த காரணத்திற்காகவும், கடிந்து கொள்வது, அநாகரிகமாக நடந்துகொள்வது, தவறான வார்த்தைகள் பயன்படுத்துவது, தேவையற்ற விவாதங்கள் மற்றும் வீண்பிரச்சனைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வீரர்கள் உடனடியாக அந்த போட்டியில் மட்டுமின்றி அடுத்து வரும் ஒரு போட்டிக்கு விளையாட தடை விதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட விதிமுறைகள் அனைத்திற்கும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது...
குறிப்பு :
இந்த தொடருக்கான பரிசுகள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.